தென்காசி ரயில் நிலையத்தில் ரூ. 1 கோடியில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி
தென்காசி ரயில் நிலையம் வளாகம் முழுவதும் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தென்காசி ரயில் நிலையம், தென்காசி மாவட்டத்தில் முக்கியமான சந்திப்பு நிலையமாகும். தென்காசியில் இருந்து கேரள மார்க்கமாகவும், மதுரை மார்க்கமாகவும், திருநெல்வேலி மார்க்கமாகவும் பல்வேறு ரயில்கள் வந்து செல்கின்றன. சென்னை வழித் தடத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் மற்றும் சிறப்பு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டு வருகிறது. மதுரை வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு பயணிகள் ரயில்கள் தென்காசி வழியாக வந்து செல்கின்றன.
கேரள மாநிலம் கொல்லத்திற்கும் தென்காசி வழியாக ரயில் இயக்கப்படுகிறது. தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் தென்காசி ரயில் நிலையம் வளாகம் முட் செடிகள் நிறைந்து பராமரிப்பின்றி காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது தென்காசி ரயில் நிலையத்தை சுற்றி வடக்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் 5 அடி உயரத்திற்கு 1300 மீட்டர் நீளத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு வருகிறது. வழக்கமான முறையில் செங்கல் அல்லது ஹாலோ பிளாக்கை கொண்டு கட்டுவதற்கு பதிலாக பெரிய அளவிலான சிலாப்புகளை கொண்டு வந்து அப்படியே நிறுவி விடுகின்றனர். இதனால் பணிகள் விரைவாக நடைபெறுகிறது.
தென்காசி ரயில் நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டதால் நிலையத்தின் வடபுறம் மங்கம்மா சாலை, குறிஞ்சி நகர், திருவிக நகர், விடிஎ ஸ்ஆர் நகர், வெல்கம் நகர், அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், 1 கிமீ தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே தென்காசி கூலக்கடை பஜாரின் வட பகுதியையும், மங்கம்மா சாலை பகுதியையும் இணைக்கும் வகையில் கனரக வாகனங்கள் சென்று திரும்பக்கூடிய வகையில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருப்பது போன்று சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Super plan. But
Tenkasi to bangalore ku illa. Athanala Tenkasi to Bangalore ku train run pannunga
Romba use full ah irukum