அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு தற்காலிகபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 40-க்கும் அதிகமான மையங்கள்உள்ளன. இதில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிக அடிப்படையிலும், நிரந்தர அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட மையங்களே நேரடியாக பணியாளர்களை நியமிக்கும். அதன்படி, பல்கலைக்கழகத்தில் செயல்படும் சுற்றுச்சூழல் கல்வி மையத்தில் 16 உதவியாளர் பணியிடங்கள் உட்பட பிற மையங்களில் 23 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதேபோல, அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகளான அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு உதவியாளர் பணியிடமும், சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் 4 உதவியாளர் பணியிடங்களும், நாகர்கோவிலில் உள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் ஒரு இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடமும் நிரப்பப்பட உள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கடைசி தேதி, தகுதி உள்ளிட்ட விவரங்கள் https://www.annauniv.edu/more.php என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.