நெல்லை மாவட்டத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை அறிக்கையை பெற புதிய இணையதளம்
நெல்லை மாவட்டத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனையை எளிதாக பெரும் வகையில் புதிய இணையதளத்தை கலெக்டர் ஷில்பா வெளியிட்டார்
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள், மருத்துவ பரிசோதனை அறிக்கையை எளிதாக பெறும் வகையில் கலெக்டரின் அறிவுரைப்படி நெல்லை மருத்துவக்கல்லூரி மூலம்
என்ற tvmcreport.org இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த இணையதளத்தை மக்கள் பயன் பாட்டிற்காக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ்வெளியிட்டார்.
இதில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நபரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணை பதிவு செய்து அந்த எண்ணிற்கு கிடைக்கும் ஒரு முறை கடவுச்சொல்லை பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள், மருத்துவ அலுவலரின் ஒப்புதலுடன் பரிசோதனை மேற்கொண்ட 24 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேரத்திற்குள் கிடைக்கும்.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள், மருத்துவ அறிக்கையை தரவிறக்கம் செய்து கொள்ள இந்த இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.