வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் – தென்காசி இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி :

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்கு வதற்கு ஏதுவாக தென்காசி மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக் கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் திட்ட மதிப்பீடு ரூ.15 லட்சம் வரையிலான உற்பத்தி சார்ந்த தொழில்கள், ரூ.5 லட்சம் வரையிலான சேவை சார்ந்த தொழில்கள் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான வியாபாரம் சார்ந்த தொழில்கள் தொடங்க 25 சதவீத அரசு மானியத்துடன் வங்கிக் கடன் பெறலாம். அதிகபட்சமாக உற்பத்தி பிரிவுக்கு ரூ.2.50 லட்சம், சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1.25 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தொழில் முனைவோர்

முதல் தலைமுறை தொழில்முனைவோர் புதிய உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு அல்லது தொழிற்கல்வி (ஐ.டி.ஐ) ஆகிய ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தில் தொழில் தொடங்க உள்ளோர், தங்களது பங்குத்தொகையாக 5 சதவீதம் மட்டுமே வங்கிக்கு செலுத்த வேண்டும். 25 சதவீத மானியத்தொகையுடன் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்

தொழில் முனைவோர் குறுந்தொழில் தொடங்க ஏதுவாக பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் திட்ட மதிப்பீடு வரையிலான உற்பத்தி தொழில்களும், ரூ.10 லட்சம் வரையுள்ள சேவைத் தொழில்களும் மேற்கொள்ள கடன் பெறலாம். திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட உற்பத்தித் தொழில் மற்றும் திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்ட சேவைத் தொழில் ஆரம்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீட்டில் 90 முதல் 95 சதவீதம் வரை வங்கிக் கடனாக வழங்கப்படும். கிராமப்புறங்களில் தொழில் ஆரம்பிக்கும் பொதுப்பிரி வினருக்கு 25 சதவீதமும், சிறப்பு பிரிவினருக்கு 35 சதவீதமும் மானியமாக வழங்கப் படும். நகர்ப்புறங்களில் தொழில் ஆரம்பிக்கும் பொதுப்பிரிவின ருக்கு 15 சதவீதமும், சிறப்பு பிரிவினருக்கு 25 சதவீதமும் மானியமாக வழங்கப்படும். www.kviconline.gov.in, www.pmegp.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் ஏஜென்ஸி DIC என்று குறிப்பிட வேண்டும்.

இத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களுக்கு 8778074528 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தக வலை தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here