தென்காசி வ.உ.சி. வட்டார நூலக வாசகர் வட்டம் மற்றும் தென்காசி நடராஜ் அகாடமி இணைந்து, TNPSC குரூப் 1 தேர்விற்கான மாதிரி தேர்வை மாவட்ட அளவில் தென்காசியில் வரும் டிசம்பர் 29-ம் தேதி அன்று நூலக வளாகத்தில் வைத்து நடத்துகின்றன.
துணை ஆட்சியர், டிஎஸ்பி போன்ற நேரடி குரூப் 1 அதிகாரிகளை உருவாக்கிய மற்றும் குரூப் 4 இந்து அறநிலைத் துறைத் தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்று முதலமைச்சரிடம் விருது வாங்கிய சென்னையை சேர்ந்த நடராஜ் அகாடமி மற்றும் தென்காசி நூலகம் இணைந்து எதிர்வரும் TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வினை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாவட்ட அளவில் தென்காசி நூலக வளாகத்தில் அரசின் விதிமுறைக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் நடத்துகிறது.
இத்தேர்வானது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்1 முதல்நிலை தேர்வின் முழு மாதிரி வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. மேலும் இத்தேர்வானது நம் பகுதியில் குரூப் 1 தேர்விற்கு தயாராகி வருபவர்கள் பயன்பெற்று அரசு தேர்வில் வெற்றி பெறும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாதிரி தேர்வினை எழுத விருப்பமுள்ளவர்கள் 8220275333, 9944317543. 9794344555 ஆகிய தொடர்பு எண்களில் பதிவு செய்திட வேண்டுகிறோம்.
தேர்வு முடிவுற்றதும் வினாத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு 2000 கேள்வி பதில்கள் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும். பதிவு செய்து தேர்வில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
Also Read: தென்காசி: திறன் மேம்பாட்டு பயிற்சி பெற ஆதிதிராவிட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..