திருநெல்வேலியில் கீழே தவறவிட்ட ரூ. 2 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த தம்பதிக்கு காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் ரஜினி முருகன். ஆட்டோ ஒட்டி வருகிறார். இவரது மனைவி கோகிலா. கடந்த சில நாட்களுக்கு முன் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ரூ. 2 லட்சத்தை பையோடு தவறவிட்டுவிட்டார். இந்த பணத்தை எடுத்த ரஜினி முருகனும் அவரது மனைவி கோகிலாவும் சுப்பிரமணியனின் வீட்டை தேடி கண்டுபிடித்து பணத்தை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதை அறிந்த திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், ரஜினி முருகன் தம்பதியை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.