நம்மில் பெரும்பாலோனார் முகநூல், கூகுள் மூலம் நமக்கு தேவையான வேலைவாய்ப்புகளை தேடி பெறுவோம். அவ்வாறு நமக்கு எளிதாக வேலை கிடைக்க உதவும் மிக முக்கியமான சமூக வலைதளம் லிங்க்டுஇன் ஆகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப் பட்டு வரும் லிங்க்டுஇன் சமூக வலைத்தளம் வேலைவாய்ப்பு பெறுவது எப்படி என்று இப்பதிவில் விரிவாக பார்ப்போம்..
முதலில் கூகுள் தேடலில் linkedin.com என்று டைப் செய்யவும்
பின்னர் கூகுள் தேடலில் வரும் Sign Up என்பதை கிளிக் செய்யவும்
புதிதாக லிங்க்டு இன் கணக்கினை உருவாக்குதல்:
நமது இமெயில் முகவரி அல்லது மொபைல் நம்பரை டைப் செய்யவும்
இரண்டாவதாக நமக்கான கடவுச் சொல்லை தெரிவு செய்து விட்டு Agree & Join பட்டனை கிளிக் செய்து கொள்ளவும்.
நமது இமெயில் முகவரிக்கு லிங்க்டு இன் சமூக வலைதளத்தில் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ மின் அஞ்சல் வரும், அதனை கிளிக் செய்து Confirm செய்து கொள்ளவும்.
மேலும் நாம் லிங்க்டு இன் கணக்கினை உருவாக்கும் போதே நம்முடைய முழு தகவல்களையும் ஒவ்வொன்றாக டைப் செய்து பதிவேற்றம் செய்யவும்
நமது கல்வித் தகுதி, சான்றிதல்கள், வேலை சம்பந்தமாக நாம் கற்று வைத்திருக்கும் ஸ்கில் சர்டிபிகேட் மற்றும் நம்மை பற்றிய முழு விவரத்தையும் பதிவு செய்து கொள்ளவும்,
இவ்வாறு நாம் பதிவு செய்துள்ள தகவல்களை பல நிறுவனங்களில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் (HR) நமது லிங்க்டுஇன் சமூக வலைதள பக்கத்திற்கு வந்து அவ்வப்போது பார்ப்பார்கள், அவர்களது நிறுவனங்களுக்கு தேவையான கல்வித் தகுதி மற்றும் ஸ்கில்ஸ் என்று சொல்லக்கூடிய துறை சார் அனுபவம் நம்மிடையே உள்ளது எனில் நம்மை நேர்முகத்தேர்விற்கு அழைப்பார்கள்
அடுத்த பதிவில் லிங்க்டுஇன் என்னும் சமூக வலைதளம் மூலம் நமக்கான வேலைவாய்ப்பை பெறுவது எப்படி என்று பார்ப்போம்