கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் அடுத்த ஓராண்டுக்கு அமலில் இருக்கும்: கேரள அரசு அறிவிப்பு!

1152

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் அடுத்த ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆரம்ப காலத்தில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த மாநிலமாக கேரளா இருந்தது. இதனை அடுத்து அம்மாநில அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக ஒரு கட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட மாநிலமாக கேரளா மாறியிருந்தது. ஆனால் தற்போது அங்கு மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு நாள்தோறும் தற்போது 100க்கும் அதிகமான பாதிப்பு பதிவாகி வருகின்றன. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,204 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பாதிப்புகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் அடுத்த ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஓராண்டுக்கு பொதுவெளிகளில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. பணியிடங்களிலும் முகமூடிகள் அணிய வேண்டும். 6 அடி சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும்.

திருமணங்களில் 50 பேர் வரை மற்றும் இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்த விதமான சமூகக் கூட்டங்கள், ஒன்றுகூடுதல், ஊர்வலங்கள், தர்ணாக்கள், சபைகள் அல்லது ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது. இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்பவர்கள் 10 பேருக்கு மேல் இருக்க கூடாது.

கடைகள் மற்றும் பிற அனைத்து வணிக நிறுவனங்களிலும், ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு பாஸ் தேவையில்லை, ஆனால் பயணிகள் ஜக்ரதா இ-பிளாட்பாரத்தில் பதிவு செய்ய வேண்டும். உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் அடுத்த ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here