மனிதம் போற்றும் மகத்தான இளம் தொழில் முனைவோர்

தொழில் முனைவோர்களுக்கு அங்கீகாரம் என்பது மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு செயல்!

சென்னையைச் சேர்ந்த கஷ்யப் சுரேஷ் ஒரு கெமிக்கல் இஞ்சினியர். கல்வியில் சிறந்து விளங்கி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலையும், டேராடூனில் முதுகலையும் படித்துவிட்டு, பல நாடுகளுக்குப் பயணம் செய்து, உலகின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றுகிறார்.
ஒருகாலகட்டத்தில் மாதம் 2 லட்ச ரூபாய் ஊதியமளித்த வேலையைத் துறந்து, சொந்தமாகத் தொழில் துவங்க எண்ணி, மே 2020 ல் அக்ரிட் சைண்டிஃபிக் (AGRID SCIENTIFIC COMPANY) என்ற நிறுவனத்தைத் துவங்குகிறார்.

அதில் அவரது முழு வேதியியல் அறிவையும் பயன்படுத்தி, நாம் அதிக விலை கொடுத்து வாங்கக்கூடிய ஹார்ப்பிக், லைசால் , சர்ஃப் லிக்விட் போன்ற கழிப்பறை, தரைகள், துணி ஆகியவற்றைச் சுத்தப்படுத்தும் வேதிப்பொருட்களை மிகமிக குறைந்தவிலையில் , மிகவும் தரமாக வழங்கத் தொடங்குகிறார்.

துவங்கியபோதே கொரோனாவால், ஊரடங்கு வந்து… கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தொழிலில் மந்த நிலை ஏற்பட்டாலும். அயராத உழைப்பால் மக்களைச் சென்றடைகிறார்.

முதலிலேயே விற்பனையை தன் நிறுவன இணையதளம் மூலம் மிகவும் தரமான முறையில் விற்கத் துவங்க, வாடிக்கையாளர்கள் சேரத்துவங்குகிறார்கள். வாய்மொழி மூலம் நற்பெயர் பரவ, விற்பனை அதிகரிக்கிறது. ஒருமுறை பயன்படுத்தியவர்கள், மீண்டும் இவரிடம் மட்டுமே வாங்குகிறார்கள்.
வாங்கியவர்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ந்துபோகிறார்கள்.

உதாரணமாக, துணி துவைக்கும் கரைசல் தனியாகவும், அதற்கு மணம் தரும் கரைசல் (Comfort) தனியாகவும் நாம் வாங்குவது வழக்கம். ஆனால், இரண்டையும் ஒரே கரைசலில் தந்து அசரவைக்கிறார்.

மேலும், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் என்று அனைத்து விதமான சுத்தமாக்கும் வேதிப்பொருட்களையும் தயாரித்து விற்கத் துவங்குகிறார்.

முக்கியமாக, இவரது தயாரிப்புகள் அனைத்தும், நமது மண்ணுக்குத் தீங்கு விளைவிக்காத , மக்கும் தன்மைகொண்ட வேதிப்பொருட்கள் கொண்டது என்ற சான்றிதழ் பெறுகிறது.

இவரைப்பற்றிக் கேள்விப்பட்ட Indian Acheivers Forum என்ற அமைப்பு, இந்தியாவில் , பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக தரமான, சூழலுக்கு இதமான வேதிப்பொருட்களைத் தயாரிக்கிறார் என்பதை அறிந்து, இவரது தொழில் நுட்பம் , சமூக அக்கறை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றை ஆராய்ந்து..

MOST PROMISING STARTUP 2021 என்ற மதிப்பு வாய்ந்த விருதை வழங்கியிருக்கிறார்கள்.
இத்தகையை இளைஞர்கள்தான் நமது தேசத்துக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். மிகவும் உற்சாகமான , செய்யும் தொழிலின் மீது மிகுந்த பற்றுக்கொண்ட , திறமைசாலியான இளைஞர் !!

இவரது தயாரிப்புகளை www.agrid.in/shop என்ற இணைய முகவரியில் சென்று வாங்கிக்கொள்ளலாம். இந்தத் தயாரிப்புகளைத்தான் சென்ற 6 மாதங்களாக எங்கள் வீட்டில் பயன்படுத்துகிறோம்.
இந்த நிறுவன தொழில் வளர்ச்சிக்கும் திரு. கஷ்யப் அவர்களுக்கும் குருவாக இருந்து வழிகாட்டுவதில் நான் உளமாரப் பெருமையடைகிறேன்.

மென்மேலும் இதுபோன்ற விருதுகளை வாங்கிக் குவிக்க, மனமார வாழ்த்துகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here