இன்று காலை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலரின் உதவியாளர் அவர்களிடமிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு..
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இல்ல வளாகத்தில் உள்ள ஒரு வேப்பமரம் சாய்ந்து விட்டதாகவும், அதை தங்களது ஆலோசனையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மீண்டும் தூக்கி நிறுத்தி அதை வளர்க்க விரும்புவதாகவும் கூறினார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் விரைந்தோம்.
பத்தடி உயரத்தில் அதன் கிளைகளை வெட்டி, ஜேசிபி உதவியுடன் அதை தூக்கி நிறுத்தி வெட்டப்பட்ட முனைகளில் மாட்டு சாணம் கொண்டு கட்டியுள்ளோம். இயற்கையின் ஆசீர்வாதம் இருப்பின் அது வளர்ந்து இந்த உலகத்திற்கான தேவையை நிறைவேற்றும்.
மன நிறைவான பணி:
மரம் சாய்ந்த அடுத்த நொடி அதை வெட்டி இடத்தை சுத்தம் செய்ய கூறியிருக்கலாம், ஆனால் அதை மீண்டும் அதே இடத்தில் வளர்க்க வேண்டும் என முனைப்பு காட்டிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், அவரின் உதவியாளர் அவர்களுக்கும் ப்ராணா மரம் வளர் அமைப்பின் சார்பாக அன்பும் நன்றியும்.
சீனிவாசன், ப்ராணா மரம் வளர் அமைப்பு, தென்காசி