வனவிலங்கு தாக்க வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வனவிலங்கு தாக்க வந்தால் என்ன செய்ய வேண்டும்?

காட்டில் ஒரு விலங்கு உங்களை உங்களை தாக்க வரும்போது கையில் நெருப்பு, தற்காப்புக் கருவிகள் இல்லாத நிலையில் எப்படி தப்பிப்பது? சில சர்வைவல் டிப்ஸ்!

ஒரு யானை உங்களை தாக்குவதற்காக துரத்தும்போது, பள்ளமான சரிவில் கீழ்நோக்கி ஓடுங்கள். மேடான பகுதிகளில் நம்மை விட யானைகள் வேகமாக ஓடும். சரிவான இடம் இல்லையென்றால், தடுக்கி விழுந்துவிடாமல் வேகமாக ஓடுங்கள். யானைகள் வேகமாக ஓடக்கூடியவை என்றாலும் அதிக தூரத்திற்கு அவைகளால் ஓட முடியாது.

புலி, சிறுத்தை துரத்தினால் ஓடி தப்பிக்க முயல்வது கடினம். புலியிடம் சிக்கினால் மரத்தின் மீது ஏறிக்கொள்ளலாம். சிறுத்தையிடம் சிக்கினால் மரத்தில் ஏறக்கூடாது. சிறுத்தை நம்மைவிட மரத்தில் அருமையாக ஏறும். மிக அருகில் வந்துவிட்டால் கண்களில் மண்ணை அள்ளி அதன் கண்களில் தூவிப் பாருங்கள்; நேராக நின்று கையை V வடிவத்தில் உயர்த்தி உங்கள் உருவத்தை பெரிதுபடுத்தி காட்டிப் பாருங்கள்; பலமாக கைதட்டி பாருங்கள்.

மிக மோசமான சூழ்நிலையில் சிறுத்தையோ புலியோ தாக்குவதற்காக உங்கள் மீது பாய்ந்து விட்டால் போராடுவதை நிறுத்தி விடாமல், மனதை ஒருமுகப்படுத்தி, உங்களை அவை விடும்வரை கை முஷ்டியினால் கண்களை குறிவைத்து தாக்குங்கள்; கம்பு, குச்சி கிடைக்கிற பொருளை எடுத்து அதன் வாயினுள் நுழைக்க முயலுங்கள். கம்பு குச்சி ‌கிடைக்காத நிலையில் உங்கள் கைகளையே மிருகத்தின் தொண்டை வரை உள்ளே விட்டு அதனை நிலைகுலையச் செய்யலாம். .

கரடி துரத்தினால் உங்களது பேக் அல்லது சட்டையை கழற்றி கீழே போட்டுவிட்டு ஓடுங்கள். அவை அதனை கவ்வி பிடித்து வைத்துக் கொள்ளும். காட்டு மாடு தாக்க வந்தால் தரையோடு தரையாக குப்புறப் படுத்து விடவேண்டும்.

தாக்க வரும் விலங்குகளிடம் இப்படி செய்தால் நூறு சதவிகிதம் தப்பித்துக் கொள்ளலாம் என்று உறுதியாக கூறமுடியாது. அதற்கு நிறைய அதிர்ஷ்டம், மன உறுதி அவசியம். கூடுமானவரை, எந்தவொரு விலங்கையும் நேருக்கு நேர் சந்திக்கும்போது, விலங்கு மீது ஒரு கண் வைத்தபடி, ஓடாமல், அமைதியாக பின்வாங்கிச் செல்வதே பாதுகாப்பானது.

எந்தவொரு விலங்கும் மனிதனை தாக்குவதை முடிந்தவரை தவிர்க்கத்தான் நினைக்கும். அதன் அருகே நிற்கும் போது, அதனை நோக்கிச் செல்லும்போது தான் பயத்தில் தற்காப்புக்காக தாக்க முயற்சிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here