ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் வேலை.. 16 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க

81
ramanathapuram-gmch-recruitment-16-posts-including-lab-technician-how-to-apply-check-details.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் வேலை.. 16 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க

ராமநாதபுரம்: தமிழக அரசின் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள 16 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன? ஆகியவை பற்றி இங்கே பார்க்கலாம்

பணியிடங்கள் விவரம்:

1. ஆடியோலஜிஸ்ட் மற்றும் ஸ்பீச் தெரபிஸ்ட் – 01
2. லேப் டெக்னீசியன் – 01
3. டென்டல் டெக்னிஷியன் – 01
4. Lab Technician Grade II – 12
5. பல்நோக்கு சுகாதார பணியாளர் – 01

என மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி:

* ஆடியாலஜிஸ்ட் மற்றும் ஸ்பீச் தெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஆடியாலஜி மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பேத்தாலஜியில் இளங்கலை பட்டம் (BASLP) முடித்து இருக்க வேண்டும்.

* லேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் – துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.

* டென்டல் டெக்னிஷியன் பணிக்கு பல் தொழில்நுட்ப வல்லுநரின் சான்றிதழ் படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

* லேப் டெக்னீசியன் பணிக்கு டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.

* பல்நோக்கு சுகாதார பணியாளர் – 8வது தேர்ச்சி

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.

சம்பளத்தை பொறுத்தவரை, ஆடியலாஜீஸ்ட் பணிக்கு மாதம் ரூ.23,000-ம், லேப் டெக்னிஷியன் பணிக்கு ரூ.13,000-ம், டென்டல் டெக்னிஷியன் பணிக்கு ரூ.12,600-ம், லேப் டெக்ன்ஷியன் கிரேடு II- ரூ. 15,000-ம், மல்டி பர்போஸ் ஹெல்த் பணியாளர் பணிக்கு ரூ.8,500-ம் வழங்கப்படும். இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை கீழ் உள்ள  இந்த லிங்கில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

PDF: விண்ணப் படிவம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இராமநாதபுரம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை அலுவலகத்தில் 26.12.2024 முதல் 09.01.2025 வரை சமர்பிக்கலாம்.

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

தேர்வு அறிவிப்பினை படிக்க:

PDF:  தேர்வு அறிவிப்பு படிவம்

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகள்

உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தென்காசி லைப் வெப் வாட்ஸ் அப் சேனலில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தென்காசி லைப் வெப் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தென்காசி லைப் வெப் டெலகிராம் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here