Zoho ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. தென்காசியில் பணி நியமனம்!

196
zoho tenkasi job vacancy

Zoho ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. தென்காசியில் பணி நியமனம்!

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் தென்காசியில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் பிரபல ஐடி நிறுவனங்கள் பல உள்ளன. அதில் ஒன்று தான் ஜோஹோ. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசியில் ஜோஹோ நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் தான் தென்காசியில் உள்ள ஜேஹோ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

zoho jobs in tenkasi

தற்போதைய அறிவிப்பின்படி ஐஓஎஸ் டெவலப்பர் (iOS Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு ஸ்விப்ட் மற்றும் ஐஓஎஸ் எஸ்டிகே -வில் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் Apple’s Human Interface Guidelines (HIG) பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும். UIKIT மற்றும் SwiftUI Frameworks உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் லோக்கல் டேட்டா ஸ்டோரேஜில் Core Data பற்றிய அறிவு இருக்க வேண்டும். மேலும் iOS டிசைன் பேட்டனில் MVC, MVVM மற்றும் VIPER உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருப்பதோடு, Xcode பயன்படுத்தி debugging ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. சம்பளம் பற்றிய விபரம் இறுதிக்கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட உள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவடையலாம். எனவே உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய

Click Here: 

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகள்

உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தென்காசி லைப் வெப் வாட்ஸ் அப் சேனலில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தென்காசி லைப் வெப் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தென்காசி லைப் வெப் டெலகிராம் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here