22/6/2022: இன்றைய தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்..
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். திருநெல்வேலி.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தனியார் துறையில் உரிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இனிவரும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக் கிழமைகளில் சிறிய அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
வருகிற வெள்ளிக்கிழமை 24/06/2022 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்வர்.
ஆகவே வேலை தேடும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி தங்கள் வருகையை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது.
https://forms.gle/4T1TPPiz1iShiEQG7