
நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களில் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் சாலையோரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் விழா நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவியை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி ஆணையர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நெல்லை மாவட்டத்தில் 584 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா தலமான பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இரண்டு நாட்களில் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
நெல்லை மாவட்டத்தில் போதிய அளவு மழை இல்லாததால் குளங்கள் நிரம்பவில்லை, புயலால் நெல்லை மாவட்டத்தில் எந்த வித பாதிப்பும் இல்லை ஏற்கனவே கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படாத சூழ்நிலையில் தற்போது பிசான சாகுபடி விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் போதுமான அளவு உரங்களும் கையிருப்பில் உள்ளது உரங்களை அதிகமாக விற்பனை செய்தால் வியாபாரிகள் மீது கடை உரிமையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்