பீடித் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு-தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
கடைகள், வர்த்தகம், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏப். ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் கூறியிருப்பதாவது: கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ. 3,985ம், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ. 5,690ம், பொது மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ. 6,513ம், சினிமா தியேட்டர் தொழிலாளர்களுக்கு ரூ.6,113ம், மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம் பணியாளர்களுக்கு ரூ.5,560ம், சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் தொழிலார்களுக்கு ரூ.3,924ம் பீடி நிறுவனங்களில் பணிபுரியும் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு 1,000 பீடிகள் சுற்றுவதற்கு ரூ.11 ம், உள் பணியாளர்களுக்கு ரூ.6,078 ம் அகவிலைப்படியாக வழங்க வேண்டும். இந்தத் தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1.4.2020 முதல் வழங்க வேண்டும்.
தொழிலாளர் துறை ஆய்வாளர்களால் சிறப்பாய்வுகள் மேற்கொள்ளும்போது இந்த ஊதியத்திற்கு குறைவாக ஊதியம் வழங்குவது கண்டறியப் பட்டால் 1948ம் ஆண்டு குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் முன்பு கேட்பு மனு தாக்கல் செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.