பம்பாய் இந்திய தொழில்நுட்பக் கழகம் இலவச ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கும் பயிற்சியை தொடங்கவிருக்கிறது.
மத்திய அரசின் “ஸ்வயம்” திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி வழங்கப் பட உள்ளது. எட்டு வாரங்கள் கொண்ட இந்தப் பயிற்சித் திட்டத்தில் சேர swayam.gov.in அல்லது iitb.ac.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
பம்பாய் இந்தியத் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் எம். கண்ணன் இந்தப் பயிற்சி வகுப்பை எடுக்கவுள்ளார். இந்தப் பயிற்சிக்குத் தேவையான மென்பொருள், வன்பொருள் ஆகியவை பற்றிய குறிப்புகளுக்குத் தகுந்தவாறு மாணவர்கள் முன்கூட்டித் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.