தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளையடுத்து கடந்த ஒன்றாம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இன்று முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாவட்டங்களுக்கு இடையே அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பேருந்துகளிலும் சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பேருந்துகள் இயக்க தயார் நிலையில் உள்ளது.
இன்று மாலை செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு 3 பேருந்துகளும், ஓசூர், கோவை, வேலூர் ஆகிய பகுதிகளுக்கு தலா ஒரு பேருந்தும் முதற்கட்டமாக இயக்கப்படுகிறது. இதில் ஒரு பேருந்தில் 20 நபர்கள் மட்டுமே பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணம் செல்லும் பயணிகள் முக கவசம் சனிடேஷர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் பயணிகள் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அறிவித்த முதல் நாளிலேயே ஆன்லைனில் டிக்கெட் விற்றுத் தீர்ந்ததால் கூடுதல் பேருந்துகள் இயக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.