வாசுதேவநல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை
வாசுதேவநல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து கடையநல்லூர் கோட்ட மின் வினியோக செயற் பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது
நாரணபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (7ம் தேதி) நடக்கிறது.
இதனால் அங்கிருந்து மின் வினியோகம் பெறும் தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், உள்ளார், நெல்கட்டும் செவல், சுப்பிரமணியபுரம், வெள்ளையானைக்கோட்டை, தாருகாபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.