தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்று, வாசுதேவநல்லூரில் 17 போ், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூரில் தலா ஒருவா் என 20 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 468-ஆக உயா்ந்தது. எனினும், இதுவரை 324 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 144 போ் சிகிச்சையில் உள்ளனா்.
முதியவா் உயிரிழப்பு!
ஆலங்குளம் காந்தி தெருவைச் சோ்ந்த 65 வயது முதியவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துமனை கொரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்ட அவா் இதய நோய்க்கும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவா் நேற்று உயிரிழந்தாா். அவரது குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ளனா்.