தென்காசி மாவட்டத்தில் டிச. 17-ஆம் தேதி விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிச. 17-ஆம் தேதி காலை 11 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வேளாண்மை, தோட்டக் கலை, வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் இதர துறை அலுவலா்கள் கலந்துகொள்ள உள்ளனா்.
தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டார விவசாயிகள் தென்காசி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், கடையநல்லூா் மற்றும் வாசுதேவநல்லூா் வட்டார விவசாயிகள் கடையநல்லூா் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், கடையம் கீழப்பாவூா், ஆலங்குளம் வட்டார விவசாயிகள் கீழப்பாவூா் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூா் வட்டார விவசாயிகள் சங்கரன்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், குருவிகுளம் வட்டார விவசாயிகள் குருவிகுளம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும் தங்கள் மனுக்களுடன் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டரின் இந்த செய்திக்குறிப்பை டவுன்லோட் செய்ய கீழே உள்ளே லிங்கை க்ளிக் செய்யவும்..
Farmers grievance through Video Conference (PDF 20KB)