பிற மாநில தொழிலாளர்களுக்கு சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு
தென்காசி மாவட்டத்தில் பணியாற்றி வரும் பிற மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப விரும்பினால் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல விரும்பினால் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட உதவி மைய தொலைபேசி எண் 04633 – 290548 அல்லது மாநில உதவி மைய தொலைபேசி எண் 75300 01100 ஐ தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இத்தகவலை மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிக்க: குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை தொடரும்