பாவூர்சத்திரம் வழியாக சென்னை மற்றும் பெங்களூருவுக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் தென்காசி தொகுதி எம்பி தனுஷ் எம்.குமார், ரயில்வே வாரியம், ரயில்வே அமைச்சகம், தெற்கு ரயில்வே பொது மேலாளர், மதுரை கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலியில் 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்படும் பிலாஸ்பூர் ரயில் பெட்டிகளை பயன்படுத்தி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம் வழியாக பெங்களூருவுக்கு ரயில் இயக்க வேண்டும்.
நெல்லை – தென்காசி சாலை விரிவாக்கப்பணி தாமதம் ஏன்?
தாதர் ரயில் காலி பெட்டிகளை பயன்படுத்தி ஞாயிற்றுக்கிழமைதோறும் திருநெல்வேலியில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம் வழியாக தாம்பரம் வரை வாராந்திர ரயிலாக இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும்பட்சத்தில் பாவூர்சத்திரம், திப்பணம்பட்டி, கல்லூரணி, கீழப்பாவூர், மேலப்பாவூர், சுரண்டை சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: நெல்லை – தென்காசி மின்சார ரயில் 2022-க்குள் இயக்கப்படும்!