அச்சன்புதூர் பகுதியில் நாளை மின்தடை
அச்சன்புதூர் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை( 27 ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்காசி மின்வாரிய செயற்பொறியாளர் கற்பக வினாயக சுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அச்சன்புதூர் உப மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சன்புதூர் உப மின் நிலையத்தில் நிலையத்திற்கு உட்பட்ட வடகரை, அச்சன்புதூர்,
வாவா நகரம், காசி தர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு ஆகிய ஊர்களில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப் படும் என்று தெரிவித்துள்ளார்.