தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லையான புளியரை காவல் நிலையத்தில் பணியாற்றிய முதல் நிலை காவலர் ஒருவர், குற்றாலம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இன்று பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக புளியரை காவல் நிலையம் மற்றும் குற்றாலம் காவல் நிலையம் ஆகியவை கிருமிநாசினி கொண்டு தெளிக்கப்பட்ட பின்னர் மூடப்பட்டன. அதே வளாகத்தில் உள்ள புளியரை ஊராட்சி மன்ற அலுவலகமும் மூடல் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் இரண்டு காவல் நிலையங்கள் மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிக்க: அருவியில் குளிப்பதன் மூலம் கொரோனா பரவுமா?