மாஞ்சோலை மலைப் பகுதியில் மழை: மணிமுத்தாறு அருவியில் காட்டாற்று வெள்ளம்

1405

மணிமுத்தாறு அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மேல்மட்ட பிரதான 7 மதகுகளும் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.


திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் தொடர் மழை பெய்ததையடுத்து மணிமுத்தாறு அருவியில் காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.


இதையடுத்து மணிமுத்தாறு அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்ததால், மணிமுத்தாறு அணையில் 7 மதகுகளும் திறக்கப்பட்டு 6 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

இதையடுத்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட ஆலடியூர் பகுதிகளில் உள்ள கரையோர மக்களை பத்திரமாக பகுதிகளுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.


2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மணிமுத்தாறு அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மணிமுத்தாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து 7 மதகுகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here