வழி தெரியாமல் சுற்றித்திரிந்த 4 வயது சிறுவனை மீட்டு 40 நிமிடத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த செங்கோட்டை காவல்துறையினர்
தென்காசி மாவட்டம்,செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணக்கப்பிள்ளை வலசை சாலையில் உதவி ஆய்வாளர் சின்னத்துரை ரோந்து பணியில் இருந்தபோது அங்கு வழி தெரியாமல் தன் பெற்றோரை பிரிந்து சாலையில் அழுதுகொண்டிருந்த 4 வயது சிறுவனை காவல் நிலையம் அழைத்து வந்தார்.
பின்னர் அச்சிறுவன் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டும், மேலும் காவல் துறையினர் அனைத்து இடங்களிலும் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டதில் அச்சிறுவன் செங்கோட்டை மேலூர் பாண்டியர் கீழத் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் கனகவேல்(4) என தெரியவந்தது.
உடனடியாக சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவர்களை காவல் நிலையம் அழைத்து அச்சிறுவனின் தந்தையுடன் அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் இச்செயலுக்கு அச்சிறுவனின் தந்தை கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.