மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு!

779

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் ஏப்ரல் 2020ம் ஆண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை இறுதிப்பருவத்திற்கான தேர்வு செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து நடைபெற உள்ளது.

முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், வணிகவியல் மாணவர்களுக்கு பகல் 2மணி முதல் 5 மணி வரையிலும் அவர்கள் பயின்ற கல்லூரியில் தேர்வு நடைபெறும்.

இறுதிப்பருவ எழுத்து தேர்வு எழுத வேண்டிய ஆய்வியல் நிறைஞர் (Mphil) மாணவர்கள் செப்-23ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும்…

அவர்கள் பயின்ற கல்லூரிக்கு வர இயலாத மாணவர்கள் அருகிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் தேர்வு எழுத ஆவண செய்யப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகளுக்கு வந்து தேர்வு எழுத இயலாத மாணவர்கள் தங்களது இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகளில் தேர்வு எழுத வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதே போல வெளி மாநிலம் அல்லது வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத இயலாத பட்சத்தில் இணையதளம் மூலமாகவோ அல்லது பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யும் ஏதேனும் ஒரு மையத்திலோ தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள், அவ்வாறு தேர்வு எழுத விரும்புபவர்கள் உடனடியாக கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டு வரும் 10ம் தேதிக்கு முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இறுதிப்பருவ தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில் அரியர் பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here