திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்மணிக்கு 2020-2021ம் ஆண்டிற்கான ஒளவையார் விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது 08.03.2021 அன்று உலக மகளிர் தினவிழா கொண்டாடும் நாளன்று வழங்கப்படும். விருதுடன் ரொக்கப்பரிசு, தங்கப் பதக்கம், சான்று, சால்வை வழங்கப்படும்.
விருது பெற விண்ணப்பிப்பவர்கள் அதற்கான உரிய படிவத்தினை திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்த படிவத்தினை வருகிற 26.12.2020-க்குள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருது விண்ணப்பித்தலுக்கான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்யவும்.
PDF: Applications are invited for Avvaiyar Award