கேரளாவில் இருந்து நோய்வாய்ப்பட்ட கோழிகளை தமிழகத்திற்கு ஏற்றி வந்த இரண்டு லாரிகளை மடக்கிப்பிடித்த புளியரை போலீசார், அதனை ஆரியங்காவு செக்போஸ்ட் வரை கொண்டு விட்டு வந்தனர்
கேரள மாநிலத்தில் இருந்து இரண்டு லாரிகளில் கடும் நோய்வாய்ப்பட்ட சுமார் 10 ஆயிரம் கோழிகளை ஏற்றிக்கொண்டு புளியரை வழியாக தமிழகத்திற்குள் வருவதாக தென்காசி மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து கோழிகளை ஏற்றிவந்த லாரிகளை மடக்கிப்பிடித்து புளியரை போலீசார் விசாரணை செய்தனர். அப்போது நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த அந்த கோழிகளை கோயம்புத்தூருக்கு கொண்டு செல்ல முயன்றதும் கோழிகளுக்கு உரிய மருத்துவ சான்று இல்லாமல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து புளியரை போலீசார் இரண்டு லாரிகளையும் திருப்பி அனுப்பி, கேரள மாநிலம் ஆரியங்காவு சோதனைச்சாவடி வரை கொண்டு விட்டு வந்தனர். லாரி டிரைவர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.