தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் கேரளாவில் இருந்தும், ஒருவர் மகாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் வந்தவர்கள். இருமல், காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களை சோதனை செய்ததில் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சோதனை செய்ததில் 19 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 426 ஆக உயர்ந்துள்ளது. 269 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 6 பேர் தென்காசியைச் சேர்ந்தவர்கள், புளியங்குடியில் 5 பேர், ஆலங்குளம், இலஞ்சி, ராயகிரியில் தலா 3 பேர், வடகரையில் 2 பேர், கடையநல்லூர், விஸ்வநாதபுரம், சேர்ந்தமரம், குறுவன்கோட்டை, நாலான்குறிச்சி, சுரண்டை, கழுநீர்குளம், கீழப்புலியூரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.