கொரோனாவை வென்ற 100 வயது மூதாட்டி!

701

தென்காசி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 100 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

செங்கோட்டையை சேர்ந்த 100 வயதான இசக்கியம்மாள் கடும் மூச்சுத்திணறல் காரணமாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு முதலில் எடுத்த சளி மாதிரியில் கொரோனா நோய்த்தொற்று அறிகுறி காணப்படவில்லை. அவருடைய மூச்சுத்திணறல் தீவிரத்தை கருத்தில் கொண்டு அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. சிடி ஸ்கேன் மூலம் அவருடைய நுரையீரலில் உள்ள பாதிப்பின் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


இசக்கியம்மாள் ஆறு நாட்கள் கொரானோ நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் பூரண குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் இச்சக்கியம்மாளை வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர்.

நன்றி: புதிய தலைமுறை

இதையும் படிக்க: கொரோனாவால் முடங்கிய குற்றாலம்; வாழ்வாதாரம் இழந்த வியாபாரிகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here