தென்காசி: அலைக்கழிக்கப்பட்ட கொரோனா நோயாளி அரசு மருத்துவமனையில் மரணம்

484

தென்காசி அரசு மருத்துவமனையில் இருந்து மூன்றே நாட்களில் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பப்பட்ட கொரோனா நோயாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா சுப்பிரமணியன். 49 வயதான இவர், சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 3ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, மூன்றே நாட்களில் 6ஆம் தேதி நெகட்டிவ் என்று கூறி ஆழ்வார்குறிச்சியில் உள்ள தனது வீட்டுக்கு அனுப்பப்பட்டார். பின் சில நாட்களிலேயே மீண்டும் உடல் நிலை மோசமாகி தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அங்கு முறையாக சிகிச்சை வழங்கப்படாமல், நெல்லை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தாமதமானதால் மூச்சுத்தினறல் அதிகமாகி, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அங்குமிங்குமாக மருத்துவ துறையினரால் அலைக்கழிக்கப்பட்டவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: samayam

இதையும் படிக்க: தென்காசியில் கொரோனாவை வென்ற 100 வயது மூதாட்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here