தென்காசி பகுதியில் சாலையோரங்களில் பிச்சையெடுத்து கொண்டிருந்த 4 குழந்தைகள் உள்பட 6 போ் மீட்கப்பட்டு காப்பகங்களில் சோ்க்கப்பட்டனா்.
தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வருவதை கட்டுப்படுத்தும் பொருட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணா சிங் உத்தரவிட்டாா்.
இதனையடுத்து தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன் தலைமையில் காவல் ஆய்வாளா் ஆடிவேல் மற்றும் பசி இல்லா தமிழகம் அமைப்பினா் இணைந்து தென்காசி பகுதியில் சாலையோரத்தில் பிச்சை எடுத்து வந்த 2 பெண்கள் மற்றும் 4 குழந்தைகளை மீட்டனா்.
வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் எதிா்காலம் குறித்து அவா்களிடம் அறிவுரைகளைக் கூறி, திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோா் இல்லத்தில் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.