தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்றோர் மற்றும் வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான தக்க செயலிகளுடன் கூடிய செல்போன் பெற்றிட விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய கைபேசி 2020 – 2021ஆம் நிதியாண்டு முதல் வழங்கப்பட உள்ளது. கைப்பேசி பெற விரும்புவோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவராகவும், 18 வயது நிரம்பிய இளங்கலை கல்வி கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவியராகவோ, வேலைவாய்ப்பற்ற பட்டதாரி மாணவ-மாணவியராகவோ, சுயதொழில் மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவராகவோ இருத்தல் வேண்டும்.மத்திய மற்றும் மாநில அரசு துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
மேலே குறிப்பிட்ட தகுதிகள் பெற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை (அனைத்து பக்கங்கள்) உணவு பொருள் வழங்கல் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள், கல்லூரியில் படிப்பவராயின் கல்லூரியில் படிப்பதற்கான சான்றிதழ், சுயதொழில் செய்பவராயின் சுயதொழில் புரிவதற்கான சான்று V.A.O.-விடம் வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகள் பட்டய சான்றிதழ் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், (மாவட்ட ஆட்சியர் வளாகம்) திருநெல்வேலி – 627 009. என்ற விலாசத்திற்கு 20.01.2021 தேதிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பித்து பயனடையுமாறும், மேலும் கடந்த செப்டம்பர் 2020 மாதம் மத்திய அரசின் நிறுவனமான Alimco ADIP திட்டத்தின் கீழ் கைபேசி பெற்றவர்கள் விண்ணப்பிக் வேண்டாம்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 0462-2500157 தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். கீ.சு.சமீரன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.