பாபநாசத்திற்கு நாளை முதல் 3 நாள் பக்தர்கள் செல்ல தடை!

1404

கொரொனா தொற்று காரணமாக தர்ப்பணம் செய்ய பாபநாசத்திற்கு பக்தர்கள் வருவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். நாளை முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் பாபநாசம் வருவதற்கு அனுமதி இல்லை.

இந்துக்களின் முக்கிய விரத நாளான மகாளய அமாவாசை வருகிற 17-ந்தேதி வருகிறது. இந்நாளில் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு நதிக்கரையில் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள புண்ணிய தலமான பாபநாசம் தாமிரபரணி நதிக்கரையில் அன்றைய தினம் தர்ப்பணம் செய்ய ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் வருவார்கள். இந்த ஆண்டில் கொரொனா தொற்று காரணமாக பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் நிற்க கூடாது என்ற உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

இதனால் தர்ப்பணம் செய்ய பாபநாசத்திற்கு பக்தர்கள் வருவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். நாளை முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் பாபநாசம் வருவதற்கு அனுமதி இல்லை. இந்த மூன்று நாட்களில் பாபநாசத்தில் உள்ள அனைத்து நதிக்கரையிலும் யாரும் குளிக்கவும் அனுமதி கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here