இ-பாஸ் ரத்து; குற்றால அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி?

9952

குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் சார்ந்து ஊரடங்கு தளர்வு என்ன சொல்கிறது என்பதை விவரமாக விளக்கும் செய்தித் தொகுப்பு…

ஊரடங்கு முறையில் தமிழகம் முழுவதும் இ-பாஸ் நடைமுறை ரத்து என பல்வேறு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு என மாநிலத்தில் உள்ள அனைத்து மலை வாசஸ்தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்வதைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல சம்பந்தப்பட்ட ஆட்சியரிடம் இ-பாஸ் பெற்றுச் செல்ல வேண்டும் என அரசு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

குற்றாலம் சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் வருவதால் குற்றாலத்திற்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டுமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தென்காசி மாவட்ட ஆட்சியர் நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் குற்றாலத்தில் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் உள்ளிட்டவை திறப்பதற்கு தடையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

இதையும் படிக்க: தென்காசியில் அமைகிறது பறவைகள் சரணாலயம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here