குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

1016

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயில் காணப்பட்டது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மழையும் பெய்தது.

Courtallam Flood
Courtallam Flood

மேற்குத்தொடர்ச்சி மலை நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டியது. ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குற்றாலத்தில் தொடர்ந்து தடை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் யாரும் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவிப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க: கேரளாவில் சுற்றுலா தலங்கள் இன்று முதல் திறப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here