தலையணை மலைவாழ் குடியிருப்பில் இலவச பல் சிகிச்சை முகாம்

686

தலையணை மலைவாழ் குடியிருப்பில் இலவச பல் சிகிச்சை முகாம்

தலையணை மலைவாழ் குடியிருப்பில் வனத்துறை சார்பில் இலவச பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு வனத்துறை மற்றும் பொதிகை இயற்கை சங்கம் இணைந்து சிவகிரி அருகேயுள்ள தலையணை மலைவாழ் குடியிருப்பில் இலவச பல் சிகிச்சை முகாமை நடத்தியது. தென்காசி எஸ்பி சுகுணாசிங் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

வனச் சரக அலுவலர்கள் (சங்கரன்கோவில்) ஸ்டாலின், (சிவகிரி) சுரேஷ், பொதிகை இயற்கை பாதுகாப்பு குழு தலைவர் ஷேக் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வள்ளியூர் பல் மருத்துவர் கார்த்திக்குமார் தலைமையிலான குழுவினர், தலையணை மலைவாழ் குடியிருப்பில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இலவச பல் சிகிச்சை அளித்தனர்.

முகாமில் சங்கரன்கோவில் வனச்சரகம் தலையணை வேட்டைத்தடுப்பு முகாமில் சிறப்பாக பணியாற்றிய வனப் பணியாளர்களுக்கு எஸ்பி சுகுணா சிங் விருது வழங்கி பேசினார். இதில் வனவர்கள் முருகன், உபேந்திரன், அசோக் குமார், பூவேந்திரன் (பயிற்சி) மற்றும் சிவகிரி, சங்கரன்கோவில் சரக வனக்காப்பாளர்கள், வனக் காவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here