சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா. புவியரசன் கூறியதாவது
தெற்கு அந்தமான் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
இது அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக டிச. 1-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், 2-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் அதிகனமழையும், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.