குற்றாலம் குற்றாலநாதர் கோயில் திருவாதிரை திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 4ஆம் நாளன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 7ஆம் நாளன்று சிறப்பு தாண்டவ தீபாராதனையும், 8ஆம் நாளன்று கோயில் மணிமண்டபத்தில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் 10ஆம் நாளன்று அதிகாலையில் சித்திர சபையிலும் தொடர்ந்து குற்றாலநாதர் கோயிலிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கண்ணதாசன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.