சிவகிரியில் ஆடுகளை திருடிய மூவர் கைது!

763

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுகப்பட்டி பகுதியில் வசித்து வரும் மாரியப்பன் என்பவர் தமக்கு சொந்தமான இரண்டு ஆடுகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சிவகிரி காவல் நிலையத்தில் மாரியப்பன் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் மாரியப்பன் விசாரணை மேற்கொண்டதில் சிவகிரி பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி என்பவரின் மகன் கருப்பசாமி (21), ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் முத்து செல்வம் (26) மற்றும் மாரிமுத்து என்பவரின் மகன் சதீஷ்குமார்(20) ஆகியோர் ஒன்றாக சேர்ந்து ஆடுகளை திருடியது தெரியவந்தது.

மேலும் இவர்கள் கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் ஆடு ஒன்றை திருடி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து சிவகிரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here