நெல்லை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,030 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 671 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 95 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,125-ஆக உயர்ந்துள்ளது. இன்று தொற்றுக்குள்ளானவர்கள் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, பாப்பாக்குடி, வள்ளியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்.