சத்தமின்றி சாதனை! கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம்!

977

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 5400 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தொற்று வேகம் காரணமாக கூடுதலாக தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே உள்ள ஸ்ரீ நல்லமணி யாதாவா கல்லூரியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் கடந்த சில மாதங்களுக்கும் முன் தொடங்கப்பட்டு அதிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா கூறுகையில், ‘’156 படுக்கை வசதி கொண்ட கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் இதுவரை இதுவரை 853 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 702 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் நிலவேம்பு கசாயம், கபசுரக் குடிநீர், மிளகு சாதம், மூலிகை ரசம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நவதானியங்கள், நெல்லிக்காய் சாறு, மூலிகை வேர்கள் கொண்டு ஆவி பிடித்தல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் காலை மாலை நேரங்களில் யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்களது மனதளவில் உற்சாகமும், உடலளவில் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட 7 நாட்கள் முதல் 8 நாட்களுக்குள் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

வீடு திரும்புவர்களை அப்படியை விட்டு விடாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் முதல்வர் தொடங்கி வைத்த ஆரோக்கியா மருந்து வாயிலாக அவர்களுக்கு 20 நாட்களுக்கு தேவையான மாத்திரைகள், லேகியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் நோயாளிகள் வேகமாக குணமடைந்து வருவதாக தெரிவித்தார்.

இவ்வாறு தென்காசி மாவட்டத்தில் கொரோனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை பலன் அளித்து வரும் நிலையில், இதற்காக தனியாக மருத்துவமனை வார்டுகள் இல்லாததால் சித்த மருத்துவ சிகிச்சை பெற விரும்பும் பிற நோயாளிகள் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே தென்காசி மாவட்டத்தில் சித்த மருத்துவமனைக்கு மாவட்ட நிர்வாகம் தமிழக அரசும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here