ஷில்பா பிரபாகர் சதீஷ் திருநெல்வேலி மாவட்டத்தின் 215வது மாவட்ட ஆட்சித்தலைவர் ஆவார். மேலும் இம்மாவட்டத்தின முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமைக்குரியவராவார்.
இவர் 2009-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். பெங்களுரூ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் (LLB) பட்டப்படிப்பினை பயின்ற ஷில்பா, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் 46வது இடத்தை பெற்றவராவார்.
2010 ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் துணை ஆட்சியராக இவரது பணி துவங்கியது. அதனைத் தொடர்ந்து சார்-ஆட்சியராக வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார். பின்பு ஓராண்டு காலம் சென்னை மாநகராட்சியில் துணை ஆணையாளராக (கல்வி) பணிபுரிந்துள்ளார்.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவராக 2017-ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்டார். தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டினை மேம்படுத்தும் வகையில் இவர் உருவாக்கிய ஒற்றைச் சாளர முறையிலான (Single Window system) தொழில் வங்குவதற்கான நடைமுறைகள் தொழில்சாலைகள் உருவாவதை எளிமையாக்கியது. இந்த புதிய முறை பல்வேறு விதங்களில் நமது மாநிலத்திற்காக புதிய முதலீடுகளை ஈர்க்க உதவியது.
இந்நிலையில் ஷில்பா பிரபாகர் சதீஷ், மே 25, 2018 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார்.
இதையும் படிக்க: குற்றாலம் தேனருவி நினைவலைகள்!