பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் இணையவழி வகுப்பு துவக்க விழா
பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இணைய வழி வகுப்பு துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சுந்தரம் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாக அதிகாரி நடராஜன் முன்னிலை வகித்தார். இதையொட்டி கல்லூரிச் செயலாளர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆசி வழங்கிப் பேசினார்.