குற்றாலம் ஸ்ரீ பராசக்தி பெண்கள் கலைக் கல்லூரியில், பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்; பி.எஸ்சி. கணிதம், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதுநிலை (PG) பிரிவில் தமிழ், வணிகவியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன
இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவிகள் www.admission.sriparasakthicollege.edu.in என்ற இணையதளம் வழியாக விண்ணபிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
1. www.admission.sriparasakthicollege.edu.in என்ற வலைத்தளத்திற்குச் சென்று நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பாடப்பிரிவை (UG/PG) தேர்வு செய்யவும்.
2. Instruction பக்கத்தை வாசித்த பின்பு ஏற்று தொடரவும்.
3. மாணவியர் தங்களைப் பதிவு செய்து தங்களுக்கான User ID மற்றும் Password பதிவு செய்யவும். ஒரே User Id-யை அரசு மற்றும் சுயநிதிப்பிரிவு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க பயன்படுத்தலாம்.
4. பதிவு செய்யப்பட்ட User Id மற்றும் Password தங்கள் கைப்பேசிக்கு அனுப்பப்படும்.
5. பின் தங்களின் தனிப்பட்ட விபரங்கள், மதிப்பெண், சாதி, மாற்றுத்திறனாளர், விளையாட்டு சிறப்புகள் மற்றும் இதர சிறப்புத் தகுதிகள் ஆகியவற்றை பதிவு செய்யவும். பதிவின் போது தங்கள் புகைப்படத்தை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதுமானது.
6. பின் அரசு மற்றும் சுயநிதிப்பாடப்பிரிவுகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்கவும். அரசு உதவிபெறும் பாடப்பரிவுகளுக்கு ஒருமுறையும் (6 பாடப்பரிவுகள் வரை தேர்வு செய்யலாம்) சுயநிதிப்பாடப்பிரிவுகளுக்கு ஒரு முறையும் (4 பாடப்பிரிவுகள் வரை தேர்வு செய்யலாம்) விண்ணப்பிக்கலாம்.
7. விண்ணப்பத்திற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்தியவுடன் நிரப்பப்பட்ட படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
8. SC/ST மாணவியருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. (அசல் சாதிச் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்)
நேர்காணல்:
1. நேர்காணல் நடைபெறும் நாட்கள் மாணவர்களுக்கு குறுஞ்செய்தியாக (Message) அனுப்பப்படும்.
குறுஞ்செய்தி (Message) கிடைக்கப்பெறாதவர்கள் www.admission.sriparasakthicollege.edu.in என்ற வலைத்தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
2. பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார், மாற்றுத் திறனாளர், முன்னாள் படைவீரர் மற்றும் இதர சிறப்புத் தகுதிகள் குறிப்பிடப்பட்டிருப்பின் அதற்கான சான்றிதழ் போன்றவற்றின் நகல்கள் நேர்காணலின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
3. நேர்காணலின்போது அனைத்து அசல் சான்றிதழ்களும் கொண்டு வரவேண்டும் விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும், அசல் சான்றிதழ்கள் கொண்டு சரிபார்க்கப்படும்.
4. விண்ணப்பிக்கும் போது நீங்கள் குறிப்பிட்ட தகவல்களில் ஏதேனும் முரணாக இருந்தாலோ தவறுதலாக இருந்தாலோ, உடனடியாக வேறு எவ்வித காரணங்களுமின்றி உங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
5. ஆவணங்கள் மிகச் சரியாக இருப்பின், நீங்கள் அரசின் வழிகாட்டுதலின்படியும், உங்களின் மதிப்பெண்கள் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட்டு கல்விக் கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவீர்.
6. தேர்வு செய்யப்பட்ட மாணவியர்கள் உடனே கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு: http://www.admission.sriparasakthicollege.edu.in/