தென்காசி கீழவாலிபன்பொத்தையில் 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; 19 வயது வாலிபர் போக்சோவில் கைது.
தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 08 வயது சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் வீட்டிற்கு சென்று விளையாடுவோம் எனக்கூறி வீட்டிற்கு அழைத்துவந்து, அச்சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து அச்சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சரஸ்வதி விசாரணை மேற்கொண்டு அந்த நபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தார்.
சங்கரன்கோவிலில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை எரித்து கொலை செய்த 3 நபர்கள் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோமதி சங்கர் தியேட்டர் வளாகத்தில் குழந்தை ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் திரு.விஐயக்குமார் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை எரித்துக் கொலை செய்தது சங்குபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர கோமதி(22) மற்றும் அவரது தாயார் இந்திரா(45) என்பது தெரியவந்தது.
அவர்களை விசாரணை செய்ததில் சங்கர கோமதிக்கும் கண்டிகைபேரியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இருந்த பழக்கத்தின் காரணமாக சங்கர கோமதி கர்ப்பமாகி அதனால் பிறந்த குழந்தை பிறந்ததாகவும்,அதனை கொலை செய்துவிட்டு வந்தால் சங்கர கோமதியை ஏற்று கொள்வதாகவும் சங்கர் கூறியுள்ளார்..எனவே சங்கர கோமதி மற்றும் அவரது தாய் இந்திரா சேர்ந்து குழந்தையை தீ வைத்து எரித்தது தெரியவந்தது.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி அவர்கள் மூன்று நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.