தென்காசி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்

899

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்

கொரோனாவை காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மறுக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்

தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர்,புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள இந்த அரசு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டதின் நோக்கமே ஏழை எளிய மக்களுக்கு முறையான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பது தான். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள குரானா வைரஸ் காரணமாக தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள மக்களுக்கு அதிக அளவு சளியுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இருதயக் கோளாறு,சுவாச பிரச்சனை,இரத்த அழுத்தம்,சக்கரை வியாதி, சிறுநீரக டயாலிசிஸ் மற்றும் மகப்பேறு போன்ற நோய்களுக்கு மருத்துவம் செய்ய அரசு மருத்துவமனைகளை நாடினால் அரசு மருத்துவர்கள் கொரானொ வைரஸை காரணம் காட்டி எந்த சிகிச்சையும் அளிக்க அளிக்காமல் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர் . இதனால் பொதுமக்கள் மருத்துவம் செய்யாமலே வீடுகளில் நோயுடன் முடங்கிக் கிடக்கின்றனர்.

அதிகமானோர் கொரோனா அல்லாத நோய்களுக்கான முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறந்துள்ளனர். மேலும் மதுரை, திருநெல்வேலி போன்ற தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய்களை கட்டணமாக வசூல் செய்துவிட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என கூறி மேலும் சிகிச்சைக்காக பல லட்சங்களை தந்தால் மட்டுமே இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்போம் என எனக்கூறி இறந்த பின்பும் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிவிட்டு பிரேதங்களை கொடுத்ததையும் தமிழக சுகாதாரத்துறை கண்டுகொள்ளாமல் விட்டதை கண்டித்தும் தென்காசியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு வரும் பெரும்பான்மையான நோயாளிகள் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதனால் உடலளவில் பலவீனமடைந்திருக்கும் நோயாளிகள் மனதளவிலும் பாதிக்கப்பட்டு அங்கேயே மரணமடைந்து விடுகின்றனர். இதனால் தென்காசி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரானொ அல்லாத இயற்கை மரணம் அடைந்தனர்

ஆகவே, தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளிலும் உடனடியாக மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க வேண்டும். போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் தேவையான மருந்து மாத்திரைகள் வழங்க வேண்டும் மேலும் . அத்தோடு கொரோனா அல்லாத நோய்களுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமையை நாடும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவம் செய்ய சுகாதாரதுறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை

முற்றுகையிட்டு கண்டன உரையாற்றிய மாநில துணைத் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் கரீம் , மாவட்ட தலைவர் ஜலாலுதீன் , மாநிலச் செயலாளர் முகம்மது பைசல், மாவட்ட செயலாளர் அப்துல் பாஸித், பொருளாளர் செய்யது மசூது சாஹிப், துணைத் தலைவர் அப்துல் காதர், துணைச் செயலாளர்கள் முகம்மது புகாரி, அப்துல் சலாம், ஹாஜாமைதீன் உட்பட தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி ,கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை,
பொட்டல்புதூர், மாலிக்நகர், வீராணம் ஆகிய பகுதியில் இருந்து ஏராளமானோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர் இவர்களை தென்காசி துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் தென்காசி சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் புதிய பேருந்து நிலையம் அருகே தடுத்து நிறுத்தினர் அதன் பின்னர் அங்கேயே ஆர்ப்பாட்டம் செய்து கண்டன உரை ஆற்றி கலைந்து சென்றனர் இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here