தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தென்காசி எஸ்.பி. சுகுணாசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் மணல் மற்றும் கனிம வளங்கள் திருட்டை ஒழிக்கும் பொருட்டு, மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் சுரங்கங்கள் கனிமங்கள் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர்ச்சியாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட கைபேசி எண் 8610791002 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவும் SMS மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவிப்பவர் இரகசியம் காக்கப்படும் என்றும் தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.